தமிழ்/Tamil *
* Users may need to install language specific fonts to view these pages
மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பற்றி
நியாயமான அரசியல் பிரதிநிதித்துவத்தையும் சேவைகளையும் பெறுவதற்கு நமது சமுதாயங்களுக்கு பலமான எதிர்காலத்திற்கான ஒரு தேவை உள்ளது, முதலில் ஒரு தேசமாக நாம் யார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டு ம்.. அதனால் தான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்று ஒன்று உள்ளது.
யு.எஸ். மக்கள் தொகைக் கணக்கெடுப்பு யுனைடெட் ஸ்டேட்ஸில் வசிக்கும் ஒவ்வொருவரையும் கணக்கில் கொள்கிறது. அரசியலமைப்பின் விதி 1, பிரிவு 2இல் இது கட்டாயமானதாகும், மற்றும் அது ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை இடம் பெறுகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் தரவுகள் யு.எஸ். பிரதிநிதித்துவ சபையில் உள்ள ஒவ்வொரு மாகாணத்திற்கான எண்ணிக்கையை நிர்ணயிக்கிறது. அரசாங்கத்தின் ஒவ்வொரு நிலையிலும் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து - சட்டமாமன்றத்துக்குரிய மாவட்டங்கள், சட்டமன்றங்கள், நகரம் மற்றும் ஊராட்சி மன்றங்கள், மற்றும் பள்ளி வாரிய மாவட்டங்கள் ஆகியவற்றை உள்ளிட்டு - மாகாண மற்றும் உள்ளூர் அரசாங்கங்களும் அரசியல் சட்டஅதிகாரங்களை வரையறுப்பதற்காக மக்கள் தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்துகின்றன.
ஆனால் இது அதோடு நிற்கவில்லை. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தரவுகள் ஃபெடரல் நிதிகளிலிருந்து உள்ளூர் சமூகங்களுக்கு சேவைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான டாலர்களை வினியோகிக்கின்றன:
அவை உள்ளிடுவன:
- அவசரகால சேவைகள்
- சுகாதாரப் பராமரிப்பு சேவைகள்
- பள்ளிகள்
- சாலைகள்
- மூத்தோர் மையங்கள் மற்றும் இன்னும் பல
நமது நாட்டில் இதுவரை நிகழ்ந்தவற்றில் கண்கூடாகப் பார்க்கப்பட்ட மிகப் பெரிய குடிமக்களின் பங்கேற்புள்ள இயக்கம் 2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகும். மார்ச் 2010இல், ஒரு சிறிய 10 கேள்விகளைக் கொண்ட படிவம் யு.எஸ். மற்றும் போர்டோ ரிகோவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டது. ஏறத்தாழ 74 சதவீத குடும்பங்கள் தங்களின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படிவத்தை தபால் மூலமாக திரும்ப அனுப்பிவிட்டனர்; மீதமுள்ள குடும்பங்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியளார்கள் யுனைடெட் ஸ்டேட்ஸ் முழுவதிலும் உள்ள அவர்களின் அருகிடங்களுக்கு சென்றதன் மூலம் கணக்கிடப்பட்டது.


